நூல் 1 : தலைப்பு இல்லை (மருந்து செய்முறை) நூல் 2 : தலைப்பு இல்லை (மருந்து செய்முறை) நூல் 3 : ரோம ரிஷி வைத்தியம் நூல் 4 : சட்டைமுனி சூத்திரம் நூல் 5 : கொங்கணர் சரக்கு வைப்பு நூல் 6 : அகத்தியர் சூத்திரம் நூல் 7 : கருவூரார் பல திரட்டு நூல் 8 : அகத்தியர் குழம்பு நூல் 9 : மாட்டு வாகடம்

Metadata

License

Alternative Title

Text 1 : No title (formulation of medicines)
Text 2 : No title (formulation of medicines)
Text 3 : Rōma Riṣi Vaittiyam
Text 4 : Caṭṭaimuṉi Cūttiram
Text 5 : Koṅkaṇar Carakku vaippu
Text 6 : Akattiyar Cūttiram
Text 7 : Karuvūrār Pala Tiraṭṭu
Text 8 : Akattiyar kuḻampu
Text 9 : Māṭṭu Vākaṭam

Author

Akattiyar
Anonymous
Caṭṭamuṉi
Karuvūrār
Koṅkaṇar
Rōma Rṣi

Content Type

Manuscript
Text

Type of Text

Verses

Date of Original Material

Mid-19th century.

Era

19th century CE

Language

Script

Description

The manuscript is composed of 9 texts, complete, written in verses. The texts deal mostly with formulation of medicines and iatrochemical processes. The manuscript has been bitten by rodents, some leaves being very damaged.
Text 1- The text is composed of palm leaves numbered from 1 to 21. The text describes the formulations of Cintāmaṇi kuḷikai and Cura kēcari kuḷikai, of Nāka centūram used to treat gastritis (kuṉmam), and preparation of medicines whose the category is not mentioned for treating venereal diseases (mēkaveṭṭai), jaundice (kāmālai), pain in the liver (īral vali), anemia (cōkai), a disease not identified (cūṭu) and state of unconsciousness (mayakam) caused by pitta imbalance, diseases caused by vāta imbalance, dysentery (aticāra kirāṇi), fistula (pavuttiram), piles (mūla vāyu), flatus (vāyvu, vayaṟu porumal), colic pains (cūlai, cūlai kaṭuppu), ascitis (makōtaram), urinary tract infection (mēkam), skin diseases (kuṭṭam), carbuncle (vippuruti), headache (maṇṭai iṭi), eye diseases (kaṇ viyāti), sinusitis (pīṉicam), tooth ache (pal viyāti), enlargement of lymph node in neck region (kaṇṭamālai), muscle cramp (keṇṭai) and burning sensation of the entire body (uṭampu erivu).
Text 2- The text is composed of palm leaves numbered from 1 to 30. It describes formulations of medicines :
Dried plant powder : Nilavākai cūraṇam.
Medicated oils : Viṭamuṭṭi tailam, Kantaka tailam and Āvārampaṭṭai tailam.
Wax-like medicine : Tāḷaka meḻuku, Cātiliṅka meḻuku, Raca meḻuku and Kantaka meḻuku; Kantaka veṇṇey
Calcined white medicine prepared from black hen : Karuṅkōḻi paṟpam.
Calcined red medicine prepared from metals and minerals : Kirāmpu centūram, Vaṅka centūram, Kantaka centūram, and Taṅka centūram.
Pills : Raca kuḷikai
Stone-like medicine :Tāḷaka kaṭṭu, Uppu kaṭṭu and Kantaka kaṭṭu,
A medicine (maruntu) for treating deafness (cevi mantam).
The text exposes the artificial method (vaippu) to prepare mercuric chloride (vīram), the method to purify calcined sulphur (kantaka veḷḷai) and describes the five types of arsenic (pañca pāṣāṇam).
Text 3- The text, entitled Rōmariṣi vaittiyam, is formed by palm leaves numbered from 1 to 6. The formulations the text presents are Pūta tailam and Paraṅkipaṭṭai tailam as well as a medicine (maruntu) for treating poisons (viṣam).
Text 4- The text, entitled Caṭṭaimuṉi Cūttiram, is made of palm leaves numbered from 1 to 8. The formulations which are exposed in the text are : Aṇṭa cuṇṇam, Kaṭuṅkāra cuṇṇam and Vaḻalai. The text provides additionally brief information on embryology (karu uṟpatti).
Text 5- The text, entitled Koṅkaṇar Carakku Vaippu, contains palm leaves numbered from 1 to 26. The text describes the artificial method (vaippu) to prepare metals : zinc (nākam) and tin (veḷḷīyam), and minerals : zinc oxide (maṭal tuttam), arsenic pentasulphide (pāṣāṇam, kauri), red sulphide of mercury (raca centūram), cinnabar (cātiliṅkam), mercuric chloride (vīram), lead monoxide (mirutārciṅki), copper sulfite (turucu), potash alum (cīṉākkāram), borax (veṅkāram), camphor (cūṭaṉ), borneol (paccai kaṟpūram), and sal ammoniac (navāccāram). The text explains the process to combine mercury and sulphur (racakanti) and to solidify mercury (racamaṇi). It informs also on the technique to make iron vessel used for iatrochemical processes that does not interact with arsenic (toṭṭi, urukku toṭṭi). Additionally, the text describes three vegetal products : Boswellia serrata (cāmpirāṇi), Ferula asafetida (peruṅkāyam) and Papaver somniferum (apiṉi).
Text 6- The text, entitled Akattiyar Cūttiram, contains palm leaves numbered from 1 to 3 on which the formulation of a pill, Kuru Kuḷikai, based on mercury, is described.
Text 7- The text, entitled Karuvūrār palatiraṭṭu, is composed of palm leaves numbered from 1 to 69; the leaves 24, 26, 30, 31 and from 38 to 48 have been very bitten. It mainly explains the preparation of medicinal products : Cūta meḻuku and Tāḷaka meḻuku, Cavukāra veṇṇey, Nāka paṟpam, Cavukāra cuṇṇam, Taṅka cempu, Tampaṉa kuḷikai and Vālai añcaṉam, Pāṣāṇa pōkku, Pāṣāṇa kaṭṭu and Liṅka kaṭṭu.
The describes arsenic (tāḷakam) and the processes to purify (cutti) zinc (nākam) and to make a pearl of solidified mercury (racamaṇi),
The text describes numerous medicinal plants (tampaṉa mūlikai) : Cannabis sativa (kañcā), Datura stramonium (marulūmattai), Ficus benghalensis (ālam viḻutu), Hemidesmus indicus (naṉṉāri), Eugenia caryophyllaea (kirāmpu), Smilax zeylanica (kaṭṭukkoṭi), Spermacoce hispida (nattai cūri), Trianthema decandra (cāraṇai, veṇcāraṇai), Jasminum angustifolium (kāṭṭu malli), Hydnocarpus laurifolia (nīrkkākkai), Calotropis procera (veḷḷerukku), Capparis zeylanica (pūmicarkkarai), Crotalaria verrucosa (nari viraṭṭi), Cacalia klieni (māṉcevikaḷḷi), Indigofera tinctoria (avurivēr), Solanum xanthocarpum (kaṇṭaṅkattiri), Heliotropium indicum (tēḷkoṭukku), fiber (naṟ) and seeds (koṭṭai) of Sphaeranthus indicus (karantai), Dolichos biflorus (karuṅkāṇam), Euphorbia tirucalli (tiruku kaḷḷi), Cassia occidentalis (ceṅkattāri), Ricinus communis (kāṭṭāmaṇakku), Phyllanthus niruri (kīḻkāy nelli), Aristolochia bracteata (āṭutīṇṭāppāḷai), (āṉai cavuṭṭaṭi), Peristrophe Paniculata (tuṭari), Clerodendron phlomides (ciṟu muṉṉai), Aristolochia indica (talai curuḷi), Andrographis paniculata (ciṟiyānaṅkai), Cressa cretica (aḻukaṇṇi), Abutilon indicum (vaṭṭa tutti), Azima tetracantha (caṅkaṉ vēr), Craeteva magna (māviliṅkam), Ammannia baccifera (nīrmēl neruppu), Gloriosa superba (kārttikai kiḻaṅku), Aconitum ferox (nāpi), Plumbago zeylanica (cittira mūli), Lawsonia inermis (marutāṇi) and a plant not identified called āṉai cavuṭṭaṭi.
The text evokes as well eight types of postures in yoga (aṣṭa karṇam)
Text 8- The text, entitled Akattiyar kuḻampu, is formed by palm leaves numbered from 1 to 4 that describe the preparation of Akattiyar kuḻampu and its adjuvant.
Text 9- The text, entitled Māṭṭu vākaṭam, contains palm leaves numbered from 1 to 4. The text concerns veterinary medicine, notably related to bovine’s diseases such as fever (aḻal nōy, vekkai nōy) and difficulty in swallowing (aṭappaṉ nōy). The text mentions a medicine (maruntu) for treating tuberculosis (elumpurukki nōy) and improving condition of undernourished cattle (poliyiṭā māṭu), as well as some other cattle’s diseases.

Description in Tamil

விருத்தம் வடிவில் எழுதப்பட்ட முழுமையான 9 நூல்களை உடையது இந்த சுவடி.இதன் நூல்கள் பெரும்பாலும் மருந்து செய்முறைகள் மற்றும் மருந்துகளின் வேதியல் குணம் பற்றி கூறுகிறது.இதன் ஓலைகள் எலியால் கடிக்கப்பட்டும், மிகவும் சேதம் அடைந்தும் உள்ளன.
நூல் 1-1முதல் 21 வரை எண் கொண்ட ஓலைகளை உடையது இந்த நூல்.இந்நூல் சிந்தாமணி குளிகை மற்றும் சுர கேசரி குளிகை போன்ற மருந்துகளின் செய்முறையும், மற்றும் குன்மத்திற்கு நாக செந்தூரம், மேகவெட்டை, காமாலை, ஈரல் வலி, சோகை, சூடு, பித்த மயக்கம், வாத நோய், அதிசார கிராணி, பவுத்திரம், மூல வாயு, வாய்வு, வயறு பொருமல், சூலை, சூலை கடுப்பு, மகோதரம், மேகம், குட்டம், விப்புருதி, மண்டை இடி, கண் வியாதி, பீனிசம், பல் வியாதி, கண்டமாலை, கெண்டை மற்றும் உடம்பு எரிவு போன்ற நோய் நிலைகளுக்கு மருந்துகளும் கூறப்பட்டுள்ளன.
நூல் 2- 1முதல் 8 மற்றும் 1முதல் 30 வரை எண் கொண்ட ஓலைகளை கொண்டது இந்த நூல்.இந்த நூல் மருந்து செய்முறைகளை பற்றி விளக்குகிறது.அவை :
சூரணம் : நிலவாகை சூரணம்.
தைலம் : விடமுட்டி தைலம், கந்தக தைலம் மற்றும் ஆவாரம்பட்டை தைலம்.
மெழுகு : தாளக மெழுகு, சாதிலிங்க மெழுகு, ரச மெழுகு மற்றும் கந்தக மெழுகு; கந்தக வெண்ணெய்
பற்பம் : கருங்கோழி பற்பம்
செந்தூரம் : கிராம்பு செந்தூரம், வங்க செந்தூரம், கந்தக செந்தூரம் மற்றும் தங்க செந்தூரம்
குளிகை : ரச குளிகை
கட்டு : தாளக கட்டு, உப்பு கட்டு மற்றும் கந்தக கட்டு.
செவி மந்தத்திற்கு மருந்து கூறப்பட்டுள்ளது.
வீரம் மற்றும் கந்தக வெள்ளையின சுத்தி முறைகளும், பஞ்ச பாஷாணம் பற்றியும் விளக்குகிறது
நூல் 3- ரோமரிஷி வைத்தியம் என்னும் இந்நூல் 1 முதல் 6 வரை எண் கொண்ட ஓலைகளை உடையது.இந்நூலில் கூறப்பட்டுள்ள மருந்துகளின் பெயர்கள் : பூத தைலம் மற்றும் பரங்கி பட்டை தைலம், மற்றும் விஷத்திற்கு மருந்தும் கூறப்பட்டுள்ளது
நூல் 4- சட்டைமுனி சூத்திரம் என்ற தலைப்புடைய இந்நூல் 1 முதல் 8 வரை எண் கொண்ட ஓலைகளை உடையது.இந்நூலில் கூறப்பட்டுள்ள மருந்துகளின் பெயர்கள் : அண்ட சுண்ணம், கடுங்கார சுண்ணம் மற்றும் வழலை.கரு உற்பத்தி பற்றியும் சில தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
நூல் 5- கொங்கணர் சரக்கு வைப்பு என்ற தலைப்புடைய இந்நூல் 1 முதல் 26 வரை எண் கொண்ட ஓலைகளை உடையது.இந்நூல் உலோகம் மற்றும் தாதுக்களின் வைப்பு முறைகளை பற்றி கூறுகிறது.அவை : நாகம், வெள்ளீயம், தாதுக்களான : மடல் துத்தம், பாஷாணம், கௌரி, ரச செந்தூரம், சாதிலிங்கம், வீரம், மிருதாரசிங்கி, துருசு, சீனாக்காரம், வெங்காரம், சூடன், பச்சை கற்பூரம் மற்றும் நவச்சாரம் ஆகும்.இந்நூல் ரசகந்தி மற்றும் ரசமணி பற்றி விளக்குகிறது.தொட்டி, உருக்கு தொட்டி பற்றியும் விளக்குகிறது.கூடுதலாக மூன்று தாவர பொருட்களான சாம்பிராணி, பெருங்காயம் மற்றும் அபினி பற்றியும் விளக்குகிறது
நூல் 6- 1 முதல் 3 வரை எண் கொண்ட ஓலைகளை உடைய அகத்தியர் சூத்திரம் என்னும் இந்நூலில் குரு குளிகை செய்முறை விளக்கப்பட்டுள்ளது.
நூல் 7- கருவூரார் பலதிரட்டு என்னும் இந்நூல் முதல் 69 வரை எண் கொண்ட ஓலைகளை உடையது ; 24,26, 30, 31, 38 முதல் 48 வரை உள்ள ஓலைகள் எலியால் கடிக்கப்பட்டு உள்ளன.இந்நூல் முக்கியமாக மருந்து செய்முறைகளை விளக்குகிறது.அவை : சூத மெழுகு மற்றும் தாளக மெழுகு, சவுகார வெண்ணெய், நாக பற்பம், சவுகார சுண்ணம், தங்க செம்பு, தம்பன குளிகை மற்றும் வாலை அஞ்சனம், பாஷாண போக்கு, பாஷாண கட்டு மற்றும் லிங்க கட்டு.
தாளகம், நாகத்தின் சுத்தி முறை மற்றும் ரசமணி பற்றியும் விளக்குகிறது.
இந்நூல் நிறைய தாவரங்களை பற்றி விளக்குகிறது.அவை (தம்பன மூலிகைகள்) : கஞ்சா, மருளூமத்தை, ஆலம் விழுது, நன்னாரி, கிராம்பு, கட்டுக்கொடி, நத்தைசூரி, சாரணை, வெண்சாரனை, காட்டு மல்லி, நீர்க்காக்கை, வெள்ளெருக்கு, பூமிசர்க்கரை, நரிவிரட்டி, மான்செவிகள்ளி, அவுரிவேர், கண்டங்கத்திரி, தேள்கொடுக்கு, நற்கரந்தை, கொட்டை கரந்தை, கருங்காணம், திருகுகள்ளி, செங்கத்தாரி, காட்டாமணக்கு, கீழ்காய்நெல்லி, ஆடுதீண்டாப்பாளை, ஆணை சவுட்டடி, துடரி, சிறு முன்னை, தலை சுருளி, சிறியாநங்கை, அழுகண்ணி, வட்ட துத்தி, சங்கன் வேர், மாவிலிங்கம், நீர்மேல் நெருப்பு, கார்த்திகை கிழங்கு, நாபி, சித்திர மூலி மற்றும் மருதாணி.
அஷ்ட காரணம் பற்றியும் விளக்குகிறது
நூல் 8-1 முதல் 4 வரை எண் கொண்ட ஓலைகளை உடைய அகத்தியர் குழம்பு என்னும் இந்நூல் அகத்தியர் குழம்பு செய்முறை மற்றும் அதன் அனுபானம் பற்றி விளக்குகிறது.
நூல் 9- மாட்டு வாகடம் என்னும் இந்நூல் 1 முதல் 4 வரை எண் கொண்ட ஓலைகளை உடையது.இந்நூல் மாடுகளுக்கு தோன்றும் நோய்களை பற்றி விளக்குகிறது.அவை : அழல் நோய், வெக்கை நோய் மற்றும் அடப்பன் நோய்.மேலும் எலும்புருக்கி நோய்க்கு மருந்து மற்றும் பொலியிடா மாடு பற்றியும் குறிப்பிடுகிறது

Extent and Format of Original Material

Size of the manuscript : 23.0cm x 3.0cm. The 9 texts are formed palm leaves numbered respectively from 1 to 21; 1 to 8 and 4 to 30; 1 to 6; 1 to 8; 1 to 26; 1 to 3; 1 to 69; 1 to 4 and 1 to 4. There are two blank leaves placed at the end of the manuscript. The manuscript is in average condition; many leaves are broken or bitten by rodents, some are very damaged.
The manuscript contains 181 palm leaves of 16 lines per leaf. It has two wooden boards.

System of Arrangement

Rearrangement : The manuscript is the first part of a manuscript divided as the leaves were of different sizes (MSS1 and MSS2).

Collection Name

Contributor

Muthusamy (Owner of the original material)

Location of Original Material

Muthusamy, Pondicherry

Custodial History

The manuscript belongs to Dr Muthusamy, a traditional siddha practitioner, who inherited them from his ancestors.

Series Name

Manuscripts from Pondicherry (PC) [Muthusamy Collection]

Series Number

Series 1 : Muthusam_PC

Level

File

EAP Project Number

EAP 810

Reference

EAP810_Muthusam_PC_MSS1

Extent of Digital Material

367 TIFF images; size of the file : 11,1 Gb.

Date Modified

2016-08-15

Key

eap810_000302

Reuse

License

Cite as

நூல் 1 : தலைப்பு இல்லை (மருந்து செய்முறை) நூல் 2 : தலைப்பு இல்லை (மருந்து செய்முறை) நூல் 3 : ரோம ரிஷி வைத்தியம் நூல் 4 : சட்டைமுனி சூத்திரம் நூல் 5 : கொங்கணர் சரக்கு வைப்பு நூல் 6 : அகத்தியர் சூத்திரம் நூல் 7 : கருவூரார் பல திரட்டு நூல் 8 : அகத்தியர் குழம்பு நூல் 9 : மாட்டு வாகடம், in Digital Collections, Institut Français de Pondichéry, Manuscripts of Siddha Medicine, consulted on April, 16th 2025, https://digitalcollections.ifpindia.org/s/manuscripts/item/369622